ஜப்பானில் 134 வாகனங்கள் சிக்கிய விபத்து; ஒருவர் பலி, 12 பேர் காயம்

1 mins read
d213af6c-6a00-48ea-bb9c-add62b4408e9
134 கார்கள் தொடர் விபத்து ஒன்றில் சிக்கின. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

ஜப்பானின் டோஹோக்கு விரைவுச் சாலையில் நேற்று (ஜனவரி 19) மதிய வேளையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு பனிப்புயல் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த 134 கார்கள் தொடர் விபத்து ஒன்றில் சிக்கின.

அந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்தனர்.

கண்களில் தென்படும் அளவுக்கு பனி விழுந்தால் வாகனங்களை மணிக்கு 50 கி.மீ. என்ற அளவுக்கு மேல் வேகம் கூடாது என அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை என்பதை இந்த விபத்து காட்டுகிறது.

பின்னால் வந்த வாகனங்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிய இந்த விபத்தால் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் 12 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்தது.

ஜப்பானின் பல பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் பனி அண்மைய காலங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்