பைடன் பெயரைக் குறிப்பிடாமல் வாழ்த்துச் சொன்ன டிரம்ப்

தாம் ஏற்­ப­டுத்தி இருக்­கும் அர­சி­யல் இயக்­கம் தற்போதுதான் தொடங்கி இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­பர் பத­வி­யில் இருந்து வில­கிச் சென்ற டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­தார்.

அதி­ப­ராக திரு டிரம்ப் ஆற்­றிய இறுதி உரை நேற்று வெளியிடப்­பட்­டது. புதிய நிர்­வா­கம் வெற்­றி­க­ர­மா­கச் செயல்­பட அதிர்ஷ்­டம் செய்­தி­ருக்க வேண்­டும் என, ஜோ பைட­னின் பெய­ரைக் குறிப்­பி­டா­மல் அவர் தெரி­வித்­தார்.

அதி­பர் பொறுப்­புக்­கு­ரிய மரபை தாம் காப்­பாற்­றி­ய­தா­க­வும் அப்­போது அவர் சொன்­னார். வெள்ளை மாளி­கை­யில் நடை­பெற்ற அதி­பர் பதவி ஏற்பு விழா­வில் பங்­கேற்­கா­மல் புறக்­க­ணித்த டிரம்ப், புதிய அதி­பர் ஜோ பைட­னைச் சந்­திக்­க­வில்லை.

அமெ­ரிக்­கா­வின் 46வது அதி­ப­ராக திரு ஜோ பைடன் இந்­நே­ரம் பதவி ஏற்­றி­ருப்­பார். அர­சி­யல் கொந்­த­ளிப்பு, கொரோனா கிரு­மிப் பர­வல் போன்ற சூழ­லில் இந்­தப் பதவி ஏற்பு முக்­கி­ய­த்­து­வம் வாய்ந்­தது. அமெ­ரிக்க நேரப்­படி புதன்­

கி­ழமை நண்­ப­க­லுக்கு சற்று முன்­ன­தாக பைடன் பதவி ஏற்­புக்கு நேரம் குறிக்­கப்­பட்டு இருந்­தது.

இரு வாரங்­க­ளுக்கு முன்­னால் திரு டிரம்ப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் புகுந்து தாக்­கு­தல் நடத்­திய அதே கேப்­பிட்­டல் கட்­ட­டத்­தில் திரு பைட­னின் பதவி ஏற்பு நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது. தலைமை நீதி­பதி ஜான் ராபர்ட் பத­விப் பிர­மா­ணம் செய்து வைப்­பார்.

பதவி ஏற்பு நிக­ழும் வேளை­யில் நேற்று வரை அதி­ப­ராக இருந்த டோனல்ட் டிரம்ப், கிட்­டத்­தட்ட 1,000 மைல்­க­ளுக்கு அப்­பால் சென்­றி­ருப்­பார். தென் ஃபுளோரி­டா­வில் உள்ள மார்-எ-லாகோ உல்­லா­சத்­த­லத்­தில் தங்­கும் வகை­யில் அவ­ருக்­கான நிகழ்ச்­சி­கள் வகுக்­கப்­பட்டு இருந்­தது. இனி வரும் நாள்­களில் அவர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­பது பற்றி உறு­தி­யான தக­வல் எது­வும் இல்லை. இருப்­பி­னும் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள அர­சி­யல் குற்­றச்­சாட்­டு­க­ளின் மீதான விசா­ரணை முடி­வைப் பொறுத்து அவ­ரது அர­சி­யல் எதிர்­கா­லம் அமை­யும் என்று கூறப்­ப­டு­கிறது. இவ்­வி­வ­கா­ரத்­தில் டிரம்ப்பை செனட் தண்­டித்­தால் 2024 அதி­பர் தேர்­த­லில் அவ­ரால் போட்­டி­யிட முடி­யாது.

இதற்­கி­டையே, பத­வியை விட்டு இறங்­கு­முன், பொதுமன்­னிப்பு மற்­றும் தண்­ட­னைக் குறைப்­புக்­கான உத்­த­ர­வில் திரு டிரம்ப் கையெ­ழுத்­திட்­டார். 70 பேருக்கு பொது மன்­னிப்­பும் 73 பேரின் சிறைத் தண்­டனை குறைப்­பும் அந்த உத்­த­ரவு மூலம் வழங்­கப்­படும்.

பொதுமன்­னிப்பு பெற்­ற­வர்­களில் முக்­கி­ய­மா­ன­வர் ஸ்டீவ் பென்­னன், 67. இதற்கு முன்­னர் 2016ல் அதி­பர் தேர்­தல் நடை­பெற்­ற­போது திரு டிரம்ப்­பின் முக்­கிய ஆலோ­ச­க­ரா­கச் செயல்­பட்­ட­வர் இவர். அமெ­ரிக்க-மெக்­சிகோ எல்­லை­யில் சுவர் எழுப்ப நிதி திரட்டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட டிரம்ப்­பின் ஆத­ர­வாளர்­க­ளி­டம் மோசடி செய்­த­தாக கடந்த ஆண்டு இவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!