பிரிட்டனில் உருவான கிருமி 60 நாடுகளுக்குப் பரவியது

பிரிட்­ட­னில் உரு­வா­ன­தா­கச் சொல்­லப்­படும் புதிய வகை கொரோனா கிருமி இது­வரை 60 நாடு­க­ளுக்­குப் பரவி இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது. இவற்­றில் பத்­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் கடந்த வாரம் அக்­கி­ருமி தொற்­றி­ய­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

ஏற்­கெ­னவே கடந்த ஓராண்­டுக்­கும் மேலா­கப் பரவி வரும் கொரோனா கிரு­மிக்கு உல­கம் முழு­வ­தும் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் பலி­யா­கி­விட்­ட­னர்.

இச்­சூ­ழ­லில் புதிய வகைக் கிருமி வேக­மா­கப் பரவி வரு­வது ஆழ்ந்த கவ­லையை உரு­வாக்கி வரு­கிறது. தடுப்­பூசி மருந்­து­கள் பர­வ­லா­கக் கிடைக்­கும் வரை கிரு­மிப் பர­வல் வேகத்­தைக் கட்­டுப்­

ப­டுத்­து­வ­தில் நாடு­கள் தீவி­ரம் காட்டி வரு­கின்­றன.

இதற்­கி­டையே, தென் ஆப்­பி­ரிக்க நாட்­டில் உரு­வாகி இருக்­கும் மற்­றொரு வகைக் கிருமி பிரிட்­ட­னின் புதிய வகைக் கிரு­மி­யைக் காட்­டி­லும் பன்­ம­டங்கு வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என நம்­பப்­ப­டு­கிறது. அவ்­வகைக் கிருமி 23 நாடு­க­ளுக்­கும் எல்­லைப் பிர­தே­சங்­க­ளுக்­கும் பரவி இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தனது வாராந்­திர தக­வ­ல­றிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்று கார­ண­மாக கடந்த ஏழு நாட்­களில் உச்ச அள­வாக 93,000 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் 4.7 மில்­லி­யன் பேரி­டம் புதி­தாக தொற்று காணப்­பட்­ட­தா­க­வும் அந்த அறிக்கை சுட்­டி­யது.

தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் தீவி­ர­ம­டைந்து உள்­ளது. இதன் மூலம் கொள்­ளை­நோய் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­படும் என்ற நம்­பிக்­கையை அது ஏற்­ப­டுத்தி உள்­ளது. ஆகஸ்ட் இறு­திக்­குள் 70 விழுக்­காட்டு பெரி­யோர்­க­ளுக்கு தடுப்­பூசி போட்டு முடிக்க இலக்கு வகுத்­துள்­ள­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யம் நேற்று தெரி­வித்­தது.

இருப்­பி­னும் ஒன்­றி­யத்­தின் பல நாடு­களும் இந்­தியா, ரஷ்யா போன்ற பிற நாடு­களும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­க­ளைப் பர­வ­லாக்­கு­வ­தில் சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றன.

உலக அள­வில் கிரு­மித்தொற்­றால் ஆக மோச­மாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெ­ரிக்கா தொட­ரு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon