மலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்

மலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்

1 mins read
e2736a7f-cb7c-4f5e-b923-caf602cac0e5
படம்: ஊடகம் -

மலேசியாவில் பள்ளிகளில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நேற்று 2,400 பள்ளிகளைச் சேர்ந்த 400,000 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

கொவிட்-19 தொற்று நெருக்கடி காரணமாக சுமார் நான்கு மாத காலமாக பள்ளி வகுப்புக்குச் செல்லாமல் இருந்த மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்கேஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஎம் மற்றும் பட்டயக் கல்விகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.

மலேசியாவில் கிருமித்தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காத நிலையில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும் மாணவர்கள் முகக்கவசம், தூர இடைவெளி, உடல் வெப்பநிலை சோதனை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மாணவர்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று அறியப்படுகிறது.