மீண்டும் வருவேன்; டோனல்ட் டிரம்ப் சூளுரை

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் புதிய அதி­ப­ராக ஜோ பைடன் பதவி ஏற்­ற­தற்கு முன்பு வெள்ளை மாளி­கையை விட்டு வெளி­யே­றி­னார் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப்.

புதிய அதி­ப­ருக்கு வாழ்த்து தெரி­வித்த டிரம்ப், ஏதே­னும் ஒரு வழி­யில் தாம் மீண்டும் வரு­வது உறுதி என்று சூளு­ரைத்­தார்.

தமது மனை­வி­யு­டன் ஃபுளோரி­டா­வுக்­குச் செல்­லும் விமா­னத்­தில் ஏறு­வ­தற்கு முன்பு தமது ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் டிரம்ப் பேசி­னார்.

“உங்­க­ளது அதி­ப­ராக இருந்­த­தைக் கௌர­வ­மா­கக் கரு­து­கி­றேன்,” என்­றார் அவர்.

அதி­ப­ராக இருந்­த­போது தாம் பல சாத­னை­க­ளைப் படைத்­த­தாக டிரம்ப் தெரி­வித்­தார். அதை அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் அவர் பட்­டி­ய­லிட்­டுக் கூறி­னார்.

அமெ­ரிக்­கர்­க­ளுக்குப் பல வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­ய­தா­க­வும் விண்­வெ­ளிப் படை ஒன்றை அமைத்­த­தும், முதி­யோ­ருக்கு உத­வும் வகை­யில் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் கோவிட்-19 தடுப்­பூசி கண்­டு­பி­டிப்பை விரை­வு­ப­டுத்­தி­ய­தா­க­வும் டிரம்ப் கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்றிட­மி­ருந்து தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்­ளும்­படி அமெ­ரிக்­கர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக துன்­புற்­ற­வர்­க­ளுக்கு அவர் மரி­யாதை தெரி­வித்­துக்­கொண்­டார்.

தாம் அதிகாரத்தில் இருந்தபோது துணை அதிபராகச் செயல்பட்ட மைக் பென்சுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

திரு ஜோ பைட­னின் பதவி ஏற்பு விழா­வில் டிரம்ப் கலந்­து­கொள்­ள­வில்லை.

1869ஆம் ஆண்டுக்குப் பிறகு தமக்குப் பிறகு அதிபராகும் நபரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாத முதல் அதிபராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் டிரம்ப்.

தமது பதவியின் கடைசி சில மணி நேரங்களில் சிறையில் உள்ள 140 பேரை டிரம்ப் மன்னித்து விடுதலை செய்தார். மோசடிக் குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகரும் அவர்களில் ஒருவர்.

அண்­மை­யில் டிரம்ப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் அத்­து­மீறி நுழைந்து வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­னர்.

வன்­மு­றை­யைத் தூண்­டி­ய­தா­கக் கூறி டிரம்ப்­பின் டுவிட்­டர் கணக்கு முடக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!