‘ஃபைசர் தடுப்பூசிக்கு ஹாங்காங் அனுமதி’

ஹாங்­காங் ஃபைஸர் பயோ­என்­டெக் கொரோனா தடுப்­பூசி மருந்தைப் பயன்­ப­டுத்த ஒப்­பு­தல் அளிக்க இணங்­கி­யுள்­ள­தாக சவுத் சீனா மார்­னிங் போஸ்ட் தெரி­வித்­தது. இதற்­கான அனு­ம­தியை அர­சாங்­கம் இந்த வாரத்­திற்­குள் அளித்­து­வி­டும் என்­றும் அந்த நாளி­தழ் தெரி­வித்­தது. முன்­ன­தாக இந்த தடுப்­பூசி மருந்து சீனா­வில் அனு­ம­திக்­கப்­பட்டு, தடுப்­பூசி போடும் பணி தொடங்­கி­யுள்­ளது. ஹாங்­காங்­கில் கொரோனா தொற்று ஓர­ள­வுக்­குக் கட்­டுக்­குள் இருக்­கிறது.

அர­சாங்­கத்­தால் நிய­மிக்­கப்­பட்ட மருத்­து­வத்­துறை ஆய்­வா­ளர் குழு ஒன்று, ஃபைஸர் தடுப்­பூசி மருந்தை பரிந்­து­ரைத்­துள்­ள­தா­க­வும், அதைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னர் ஹாங்­காங் அந்த மருந்து குறித்த, அதா­வது அந்­தத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் உடல்­நிலை பற்­றிய தரவு விவ­ரங்­களை அறிந்­து­கொள்­வ­தற்கு ஜெர்­மன், நார்வே ஆகிய அர­சாங்­கங்­க­ளி­டம் நாடி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஹாங்­காங்­கின் உணவு மற்­றும் சுகா­தா­ரத்­து­றை­யின் செய­லா­ளர் சோஃபியா சான், ஃபைசர் தடுப்­பூசி பயன்­ப­டுத்­து­வது குறித்த இறுதி முடிவை எடுப்­பார் என்று அந்த நாளி­தழ் தெரி­வித்­தது.

ஹாங்­காங்­கில் கொவிட்-19 தொற்­றுக்கு இது­வ­ரை­யி­லும் 166 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர். இது 2003 ஹாங்­காங்­கில் சார்சு நோய்க்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பாதிதான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!