இந்தோனீசியா, மலேசியாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு

1 mins read
875ceddf-0c1b-4015-82a7-c3664f63d4f6
(இடமிருந்து) ரிது­வான் இசா­மு­தீன் என்­னும் இந்­தோ­னீ­சி­ய­ தீவிரவாதியும் முகம்­மது நஸிர் லெப், முகம்­மது ஃபாரிக் அமின் ஆகிய மலே­சி­யர்­களும் ஜெமா இஸ்­லா­மிய தீவி­ர­வா­தக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று குற்­றச்­சாட்­டில் கூறப்­பட்டுள்­ளது. -

2002ஆம் ஆண்­டின் பாலி வெடி­குண்டு தாக்­கு­தல், 2003ஆம் ஆண்­டின் ஜகார்த்தா தாக்­கு­தல் ஆகிய சம்­ப­வங்­க­ளின் தொடர்­பில் மூவர் மீது சட்ட வழக்­கப்­ப­டி­யான குற்­றச்­சாட்­டு­களை அமெ­ரிக்க ராணு­வம் சுமத்தி உள்­ளது.

அவர்­களில் ஒரு­வர் இந்­தோ­னீ­சி­யர், மற்ற இரு­வர் மலே­சி­யர்­கள். தாய்­லாந்­தில் மூவ­ரும் பிடி­பட்டு சுமார் 18 ஆண்­டு­கள் ஆன நிலை­யி­லும் 14 ஆண்­டு­க­ளுக்கு மேல் அமெ­ரிக்க ராணுவ சிறை­யில் கைதி­க­ளாக இருக்­கும் நிலை­யி­லும் குற்­றச்­சாட்­டு­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன. ரிது­வான் இசா­மு­தீன் என்­னும் இந்­தோ­னீ­சி­ய­ தீவிரவாதியும் முகம்­மது நஸிர் லெப், முகம்­மது ஃபாரிக் அமின் ஆகிய மலே­சி­யர்­களும் ஜெமா இஸ்­லா­மிய தீவி­ர­வா­தக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று குற்­றச்­சாட்­டில் கூறப்­பட்டுள்­ளது.

2002 அக்­டோ­பர் 12ஆம் தேதி நிகழ்த்­தப்­பட்ட பாலி வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் 202 பேர் கொல்­லப்­பட்­ட­னர். அதற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜகார்த்­தா­வில் உள்ள ஜே டபிள்யூ மரி­யட் ஹோட்­ட­லில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் 12 பேர் மாண்­ட­தோடு ஏரா­ள­மா­னோர் காய­முற்­ற­னர்.

கொலை, கொலை முயற்சி, சதித்­திட்­டம் தீட்­டு­தல், வேண்­டு­மென்றே கொடுங்­கா­யம் ஏற்­ப­டுத்­து­தல், பயங்­கா­ர­வா­தம், பொது­மக்­கள் மீதான தாக்­குல் உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் மூவர் மீதும் சுமத்­தப்­பட்டு உள்­ள­தாக அமெ­ரிக்க ராணு­வத் தலைமை அலு­வ­ல­க­மான பென்­ட­கன் தனது அறிக்­கை­யில் தெரி­வித்துள்­ளது.