பல்லாயிரம் மக்களை முடக்க தயாராகிறது ஹாங்காங்

பல்லாயிரம் மக்களை முடக்க தயாராகிறது ஹாங்காங்

1 mins read
4b86437e-6bdd-4dbb-961a-0363831b769d
ஹாங்காங்கின் யாவ் மா டெய் வட்டாரத்தில் நேற்று கடைகள் அடைக்கப் பட்டு ஆரஞ்சு நிற நாடாவால் வழிமறிக்கப்பட்டிருந்தது. படம்: புளூம்பெர்க் -

கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் மோச­ம­டைந்து வரு­வ­தைத் தொடர்ந்து பல்­லா­யி­ரம் மக்­களை முடக்கி வைக்க ஹாங்­காங் தயா­ராகி வரு­வ­தாக உள்­ளூர் ஊட­கச் செய்தி ஒன்று நேற்று தெரி­வித்­தது. முடக்­கம் இந்த வார இறு­தி­யில் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சவுத் சைனா மார்­னிங் போஸ்ட் செய்­தித்­தாள் கூறி­யது.

முக்­கிய நகர மாவட்­ட­மான கொவ்­லூன் முடக்­கப்­ப­டும்­போது யாவ் சிம் மொங்க் வட்­டா­ரத்­தைச் சுற்றியுள்ள 150க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களும் அத­னுள் அடங்­கும். எனவே, முடக்­கம் அறி­விக்­கப்­பட்ட பின்­னர் 4,000 முதல் 9,000 வரை­யி­லான குடி­யி­ருப்­பா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றது அச்­செய்தி. குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் நிறைந்த பகுதி என்­ப­தோடு பழ­மை­யான கட்­ட­டங்­கள் பல அந்த வட்­டா­ரத்­தில் உள்­ளன.

இவை அத்­த­னை­யும் கட்­டாய கிரு­மிப் பரி­சோ­தனை வட்­டா­ரத்­திற்­குள் இன்று அல்­லது நாளை கொண்டு வரப்­பட இருப்­ப­தா­கச் செய்தி வெளி­யா­னா­லும் அர­சாங்­கத் தரப்­பி­னர் கருத்­துத் தெரி­விக்க மறுத்து வரு­கின்­ற­னர்.