'டிரம்ப் போன பின் சுதந்திரமாக உணர்கிறேன்'

'டிரம்ப் போன பின் சுதந்திரமாக உணர்கிறேன்'

1 mins read
db7a3a09-7378-467a-a66b-16594e9174ce
-

இப்போது அதி பர் ஜோ பைட னின் தலைமை யின்கீழ் சுதந் திர உணர்வைப் பெறுவதாக வெள்ளை மாளிகை சுகாதார ஆலோகர் ஆண்டனி ஃபவுசி கூறியுள்ளார். திரு டோனல்ட் டிரம்ப் அதிபர் பொறுப்பில் இருந்து விலகி விட்ட பின்னர் அறிவியல் தொடர்பான உண்மைகளை அச்ச உணர்வின்றி தம்மால் பேசமுடிவதாகவும் அவர் செய்தி யாளர்களிடம் கூறினார். தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க் கழகத்தின் இயக்குநரான திரு ஃபவுசி, 80, முன்னாள் அதிபர் டிரம்ப்பின் அரசாங்கத்தால் அதிகமாக ஒதுக்கப்பட்டு வந்தார்.

கிருமிப் பரவல் விவ காரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், புதிய அதிபர் பைடன் கொவிட்-19 தொடர் பான புதிய தேசிய உத்தியை வெளியிட்டு பத்து உத்தரவு களில் கையெழுத்திட்டு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்கு முக்கி யத்துவம் கொடுத்த பின்னர் அவர் மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பி உள்ளார். கிருமித்தொற்று காரணமாக 420,000 அமெரிக்க மக்கள் உயிரிழந்துவிட்டனர். 25 மில்லி யனுக்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.