கெடாவில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் கோரிக்கைகள்

கெடாவில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் கோரிக்கைகள்

1 mins read
46599f44-001b-4a59-8d96-0c352eaae524
படம்: மலேசிய ஊடகம் -

கெடாவில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்யக்கூடாது என்று மலேசிய வர்த்தகர் தொழிற் சங்கம்(எம்டியுசி) வலியுறுத்தியுள்ளது.

கெடா மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

கிருமிப் பரவலை காரணம் காட்டி இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள வேளையில் தொழிற்சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

"ஊழியர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளையும் காணிக்கைகளையும் நிறைவேற்ற விடுமுறை தேவைப்படுகிறது," என்று எம்டியுசியின் தலைமைச் செயலாளர் கமருல் பஹ்ரின் மன்சூர் கூறினார்.

தைப்பூச விடுமுறையை அரசியலாக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசிய சீனர் சங்கமும் தைப்பூச விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.