பிரிட்டிஷ் பிரதமர்: உருமாறிய கொவிட்-19 கிருமி அபாயகரமானது

அண்­மைய மாதங்­க­ளாக பிரிட்­டனில் பரவி வரும் உரு­மா­றிய கொவிட்-19 கிருமி அதிக உயிர் இ­ழப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது, விரைந்து பர­வக்­கூ­டி­யது என்­பதை ஆய்வு முடிவுகள் காட்­டு­வ­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார். அதுவே பிரிட்­ட­னில் கொரோனா உயி­ரி­ழப்­பு­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்குக் கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டார். அங்கு நேற்று முன்­தி­னம் மட்­டும் 1,401 பேர் கொரோனா தொற்­றால் மாண்­டு­போ­யி­னர். இதை­ய­டுத்து, ஐரோப்­பா­வி­லேயே ஆக அதி­க­மாக, பிரிட்­ட­னில் இது­வரை கிரு­மித்­தொற்­றால் 95,981 பேர் இறந்­து­விட்­ட­னர்.

உரு­மா­றிய கொரோனா தொற்­றால் சில வய­துப் பிரி­வி­ன­ரி­டத்­தில் 30-40% அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­ட­லாம் என்று அர­சாங்­கத்­தின் தலைமை அறி­வி­ய­லா­ளர் பேட்­ரிக் வேலன்­சும் கூறி­யுள்­ளார்.சரா­ச­ரி­யாக, பிரிட்­ட­னில் 55 பேரில் ஒரு­வரையும் லண்டனில் 35 பேரில் ஒருவரையும் கொரோனா தொற்றி­விட்­டது. இது­வரை 5.4 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­கக் கூறிய திரு ஜான்­சன், உரு­மா­றிய கிரு­மிக்கு எதி­ரா­க­வும் அது செயல்­தி­றன்­மிக்க­தாக உள்ளது என்­றும் சொன்­னார்.

பிப்­ர­வரி மாத நடுப்­ப­கு­திக்­குள் 15 மில்­லி­யன் பேருக்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­குள் பெரி­ய­வர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட பிரிட்­டன் இலக்கு கொண்டு உள்­ளது. இத­னி­டையே, சீனா உட்­பட 60க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்கு உரு­மா­றிய கொரோனா கிருமி பரவி­விட்­ட­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!