மலேசியாவில் தடுப்பூசி போட முன்னோட்டத் திட்டம்

மலேசியாவில் தடுப்பூசி போட முன்னோட்டத் திட்டம்

1 mins read
ccc95cca-dbfa-4065-9240-e1f744fd0715
மலேசியாவில் தேசிய அளவில் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளை முன்னோட்டம் பார்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 மருத்துவமனைகளில் சிலாங்கூரில் உள்ள அம்பாங் மருத்துவமனையும் ஒன்று. படம்: கூகல் வரைபடம் -

கொவிட்-19 தடுப்பூசி போடுவது தொடர்பான முன்னோட்டத் திட்டத்தை மலேசியா தொடங்கியுள்ளது.

இதை இணையம் வழியாக நடத்தப்பட்ட அறிமுக விழாவில் மலேசிய சுகாதார அமைச்சர் அதாம் பாபா இன்று (ஜனவரி 27) தொடங்கிவைத்தார்.

மலேசியாவெங்கும் உள்ள ஒன்பது மருத்துவமனைகள் இந்தச் முன்னோட்டத் திட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னோட்டத் திட்டத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவின் சுகாதார அமைச்சின் மருந்தக ஆராய்ச்சிப் பிரிவின் கண்காணிப்பின்கீழ் இந்த முன்னோட்டத் திட்டம் நடைபெறும்.

13 மாதங்களுக்கு நடத்தப்படும் இந்த முன்னோட்டத் திட்டத்தில் 3,000 உள்ளூர் தொண்டூழியர்கள் பங்கெடுக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்