வரலாறு காணாத அளவு மலேசியாவில் கொவிட்-19 பதிவு; புதிதாக 5,725 பேருக்குத் தொற்று

வரலாறு காணாத அளவு மலேசியாவில் கொவிட்-19 பதிவு; புதிதாக 5,725 பேருக்குத் தொற்று

1 mins read
369c8dee-ba8e-427a-b5df-d8503176bcb6
-

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவு கொவிட்-19 கிருமித்தொற்றியவர்களின் எண்ணிக்கை இன்று 5,725ஆகப் பதிவானது.

அந்நாட்டில் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 200,000 தாண்டியுள்ளது.

இன்று மாண்டோரின் எண்ணிக்கை 16ஆக பதிவானதைத் தொடர்ந்து மொத்தம் மலேசியாவில் இதுவரை 733 பேர் கிருமித்தொற்றால் மாண்டுள்ளனர்.