தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா, இந்தோனீசியாவில் புதிய உச்சத்தை எட்டிய தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை

1 mins read
5604932a-329f-446a-891d-55e954fab59c
இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது. படம்: இபிஏ -

மலேசியா, இந்தோனீசியாவில் புதிய உச்சமாக அதிக அளவிலான கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று (ஜனவரி 30) பதிவாகியுள்ளன.

இந்தோனீசியாவில் இன்று ஒரே நாளில் 14,518 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து, அங்கு இதுவரை 1.06 மில்லியன் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே ஆக அதிக எண்ணிக்கை இது.

இன்று புதிதாக 210 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்ததையடுத்து, அங்கு இதுவரை 29,728 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, மலேசியாவில் இன்று புதிதாக 5,728 பேருக்கு கொவிட்-19 பதிவானது. இரண்டாவது நாளாக அங்கு கிருமித்தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று அங்கு 5,725 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை அங்கு 209,661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இன்று 13 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்த நிலையில் அங்கு இதுவரை 746 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர்.

இந்தோனீசியாவில் 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கி இதுவரை 250,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 1 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட அந்நாட்டு அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.

மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்