டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகக் கூட்டமைப்பில் சேர விண்ணப்பிக்கும் பிரிட்டன்

டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகக் கூட்டமைப்பில் சேர விண்ணப்பிக்கும் பிரிட்டன்

1 mins read
11b7a16d-f97a-4cc0-b997-a390b677b767
படம்: ஏஎஃப்பி -

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிட்டன், 11 நாடுகள் அங்கம் வகிக்கும் டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக கூட்டமைப்பில் சேர அடுத்த வாரம் முறையாக விண்ணப்பிக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதிலிருந்து, சிபிடிபிபி எனும் இந்தக் கூட்டமைப்பில் இணைவதில் ஆர்வம் உள்ளதை பிரிட்டன் வெளிப்படுத்தி வந்தது.

ஆஸ்திரேலியா, புருணை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, புதிய சிசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பில் பிரிட்டன் இணைவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பெரும்பாலான வரிகள் விலக்கப்படும்.

"நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஓராண்டு கழித்து, பிரிட்டன் மக்களுக்கு மகத்தான பொருளாதார நன்மைகளைத் தரும் புதிய கூட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்," என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"இதில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் சிறந்த முறையில் வர்த்தகம் செய்வதற்கான எங்களின் லட்சியம் நிரூபிக்கப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.