மியன்மாரின் மான்டலே நகரில் ஆர்ப்பாட்டம்; பலர் கைது

மியன்மாரில் இந்த வாரம் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பின் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மான்டேலியில் நேற்று ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலர் கைதாகியுள்ளதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங் சான் சூச்சியின் ஆட்சியை அந்நாட்டின் ராணுவத் தலைவர்கள் கவிழ்த்தபின் அங்கு நடைபெற்றுள்ள முதல் ஆர்ப்பாட்டம் இது என ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தலைநகர் யங்கூன் மற்றும் மான்டலே நகரத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இதில் சமூக ஊடகங்களில் வலம் வரும் படங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்திய படி ராணுவப் புரட்சியாளர்களுக்கு எதிராக கோஷமிடுவதைக் காணமுடிவதாக கூறப்படுகிறது.

மேலும், மான்டலே மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு வெளியே 20 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் காட்சி காணொளியில் தெரிகிறது. அதில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒருவர், “மக்கள் ராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பரிக்கின்றனர்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது தெரிவதாக செய்தித் தகவல்கள் விளக்குகின்றன.

அத்துடன், “கைது செய்யப்பட்ட எங்கள் தலைவர்களை விடுவிக்கவும்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சல் போடுவது தெரிவதாக கூறப்படுகிறது.

மியன்மாரில் ராணுவம் தேர்தலில் வெற்றி பெற்று அமைந்த ஆட்சியைக் கலைத்து அதன் தலைவரான ஆங் சான் சூச்சி அம்மையாரை கைது செய்துள்ளது.

அவர் இறக்குமதி, ஏற்றுமதி விதிகளை மீறி கையடக்க தொலைபேசி சாதனங்களை வாங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களை பலப் பிரயோகம் கொண்டு அடக்குவது மியன்மார் ராணுவத்துக்கு வழக்கமான ஒன்று என்று செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!