மேற்கு ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ கட்டுக்குள் வந்தது

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ கட்டுக்குள் வந்தது

1 mins read
e36012c3-7661-4522-bf15-8771cf8a68d0
-

சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அருகே பற்றி எரியும் புதர்த்தீயைத் தீயணைப்பாளர்கள் கட்டுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

புதர்த்தீயால் அங்கு குறைந்தது 86 வீடுகள் தீக்கிரையாகின.

பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குடியிருப்பாளர்கள் வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதர்த்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது ஏழு தீயணைப்பு வீரர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

எனினும், தீச்சம்பவத்தால் எவரும் மரணம் அடைந்ததாக தகவல் இல்லை. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய புதர்த்தீயால் 10,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலபரப்பு தீக்கிரையாகிவிட்டது.