இந்தியா முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

இந்தியா முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

2 mins read
8289aef8-dbec-41dc-bcce-8d23c7f72976
-

வேளாண் சட்­டங்­களை இந்­திய அர­சாங்­கம் திரும்பப் பெறக்­கோ­ரும் வித­மாக நாடு முழு­வ­தும் நேற்று 'சக்கா ஜாம்' என்ற பெயரில் நெடுஞ்­சாலை மறி­யல் போராட்­டத்தை விவ­சா­யி­கள் நடத்­தி­னர். நாடு முழு­வ­தும் முக்­கிய நெடுஞ்­சா­லை­களில் நண்­ப­கல் 12 மணி முதல் பிற்­ப­கல் 3 மணி வரை விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தங்­க­ளது போராட்­டத்­தின்­போது அவ­சர மருத்­துவ வாக­னங்­கள், பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் சென்ற வாக­னங்­கள், அத்­தி­யா­வ­சிய மற்­றும் அவ­சர தேவைக்­கான வாக­னங்­கள், பள்ளி வாக­னங்­கள் ஆகி­ய­வற்றை விவ­சா­யி­கள் தடுத்து நிறுத்­த­வில்லை. பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தாத வகை­யில் அமை­தி­யான முறை­யில் போராட்­டத்தை நடத்­தப்­போ­வ­தாக விவ­சா­யி­கள் முன்­ன­தாக அறி­வித்து இருந்­த­னர்.

மறி­யல் போராட்­டத்­தின்­போது சாலை­யில் சிக்­கிக்­கொண்ட வாக­ன­மோட்­டி­க­ளுக்கு உணவு, தண்­ணீர் ஆகி­ய­வற்றை விவ­சா­யி­கள் வழங்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது. டெல்­லி­யில் அனைத்துப் போராட்­டங்­களும் மறி­யல் தளங்­கள் போலவே காணப்­ப­டு­வ­தால் டெல்­லிக்­குள் சாலை மறி­யல் போராட்­டம் நடத்­தப்­ப­டாது என்று விவ­சாய சங்­கத்­தி­னர் அறி­வித்­தி­ருந்­த­னர். அதன்­படி டெல்­லி­யில் மறி­யல் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வில்லை. டெல்­லி­யில் விவ­சா­யி­கள் ஏற்­கெ­னவே போராட்­டம் நடத்தி வருகிற இடங்­க­ளைத் தவிர, மற்ற பகுதி­களில் உள்ள சாலை­களில் போக்­கு­வ­ரத்து சீராக இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்திய குடி­ய­ரசு தினத்­தன்று டெல்­லி­யில் விவ­சா­யி­கள் நடத்­திய டிராக்­டர் பேர­ணி­யில் வன்­முறை ஏற்­பட்­ட­தால் நேற்­றைய விவ­சா­யி­க­ளின் சாலை மறி­யல் போராட்­டத்­தில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் எது­வும் நிகழ்ந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக நாடு முழு­வ­தும் பாது­காப்­புப் பணி­களில் போலி­சார் ஈடு­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­னர்.

டெல்­லி­யில் மட்­டும் பாது­காப்பு பணி­க­ளுக்­காக மொத்­தம் 50,000 போலி­சார் குவிக்­கப்­பட்­ட­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன. போராட்­டத்­தில் வன்­முறை நிகழ்ந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக விவ­சாய சங்­கங்­களை சேர்ந்த முக்­கிய தலை­வர்­கள் சிலர் கைது செய்­யப்­பட்­ட­னர்.