பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வரத் தொடங்கின

பிரஸ்­ஸல்ஸ்: ஆஸ்ட்­ர­செ­னிகா நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்கு வந்­து­சேர்ந்­துள்­ளன.

அந்­நி­று­வ­னத்­தின் முதல் தொகுதி தடுப்­பூ­சி­கள் நேற்று முன்­தி­னம் பிரான்­சுக்கு வந்­து­சேர்ந்­த­தைத் தொடர்ந்து சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணியை அந்­நாடு நேற்று தொடங்­கி­யது.

ஜெர்­மனி, அயர்­லாந்து, ஸ்பெயின், ஆஸ்­தி­ரியா உள்­ளிட்ட நாடு­களும் தடுப்­பூசி போடும் பணி­யைத் தொடங்­கி­யுள்­ளன. போர்ச்­சு­க­லில் தடுப்­பூ­சி­கள் அடுத்த வாரம் வந்­து­சே­ரும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தடுப்­பூசி விவ­கா­ரம் தொடர்­பில் ஆஸ்ட்­ர­செ­னிகா நிறு­வ­னத்­து­டன் ஐரோப்­பிய ஒன்­றி­யம் கடந்த சில வாரங்­க­ளாக மோத­லில் ஈடு­பட்டு வந்­தது.

தற்­போது அந்­நி­று­வ­னத்­தின் தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரும் வேளை­யி­லும், அவற்­றைப் பெறு­வ­தில் தாம­தம் ஏற்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் அர­சாங்­கங்­கள் தொடர்ந்து கவ­லைப்­ப­டு­கின்­றன. ஐரோப்­பா­வில் தற்­போது நாள்­தோறும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் நோய்த்­தொற்­றால் உயி­ரி­ழக்­கின்­ற­னர். புது­வகை கொரோனா கிருமி உரு­வெ­டுப்­ப­தால் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஐரோப்­பிய அர­சாங்­கங்­கள் தொடர்ந்து முடக்­க­நி­லையை நடப்­பில் வைத்­துள்­ளன.

இந்­நி­லை­யில், ஜெர்­மா­னி­யப் பிர­த­மர் ஏஞ்­சலா மெர்க்­க­லும் மாநில அர­சாங்­கத் தலை­வர்­களும் அடுத்த வாரம் சந்­திக்­கும்­போது அந்­நாட்­டில் கொவிட்-19 கட்­டுப்­பாடு­கள் நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களை கிரீஸ் நேற்று முன்­தி­னம் கடு­மை­யாக்­கி­யது. பிரிட்­டன், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் தடுப்­பூசித் திட்­டம் மெது­வா­கச் செயல்­பட்டு வரு­வ­தாக தடுப்­பூ­சிப் பணி­களைக் கண்­கா­ணிக்­கும் புளும்­பெர்க் நிறு­வனம் தெரி­விக்­கிறது.

ஐரோப்­பா­வில் தடுப்­பூ­சித் திட்­டம் மெது­வாக தொடங்­கி­னா­லும் கோடைக்­கா­லம் முடி­வ­டை­வ­தற்­குள் பெரி­ய­வர் மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு தடுப்­பூசி போட்டு முடிக்க ஐரோப்­பிய ஆணை­யம் திட்­ட­மிட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் மாதங்­களில் தடுப்­பூ­சித் திட்­டம் வேக­மெ­டுக்­கும் என்று அது எதிர்­பார்க்­கிறது. இவ்­வாண்டு இரண்­டாம் காலாண்­டில் குறைந்து 300 மில்­லி­யன் தடுப்­பூசி­களை விநி­யோ­கிக்க இலக்கு நிர்­ணயிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!