வர்த்தகங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு

வர்த்தகங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு

1 mins read

சோல்: தென்­கோ­ரி­யா­வில் தலை­ந­கர் சோலுக்கு வெளியே அரை மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான உண­வ­கங்­கள், இதர வர்த்­த­கங்­களுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நேற்று தளர்த்­தப்­பட்­டன. இத­னால் கூடு­த­லாக ஒரு மணி நேரம் அவை திறந்­தி­ருக்­க­லாம் என அந்­நாட்­டுப் பிர­த­மர் சுங் சாய் கியூன் தெரி­வித்­துள்­ளார்.

தலை­ந­கர் சோலுக்கு வெளியே செயல்­படும் வர்த்­த­கங்­கள் இரவு 10 மணி வரை செயல்­ப­ட­லாம் என்­றா­லும், தலை­ந­க­ரில் இயங்­கும் வர்த்­த­கங்­கள் இரவு 9 மணிக்கு மூடு­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும் என்று அவர் நேற்று கூறி­னார். அங்கு கொவிட்-19 நோய்த்­தொற்று அபா­யம் தொடர்ந்து நீடிப்­பதே அதற்­குக் கார­ணம் என்­றார் அவர்.

உண­வ­கங்­கள், சிற்­றுண்­டிச்­சாலை உள்­புற உடற்­ப­யிற்­சிக்­கூடங்­கள், கரா­வோக்கே மது­பானக்­கூ­டங்­கள் உட்­பட ஏறக்­குறைய 580,000 வர்த்­த­கங்­கள் அவற்­றில் அடங்­கும் என்று துணைச் சுகா­தார அமைச்­சர் காங் டோ டே செய்­தி­யா­ளர்­களி­டம் கூறி­னார். இந்த வழி­காட்டி நெறி­மு­றை­களை மீறும் வர்த்­த­கங்­கள் இரு வாரங்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­படும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.