'மேற்கு ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ கட்டுக்குள் வந்தது'

'மேற்கு ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ கட்டுக்குள் வந்தது'

1 mins read
a4088aa3-2cb3-49ef-ae91-7d36882671be
-

சிட்னி: மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெர்த் நக­ருக்கு அருகே பற்றி எரி­யும் புதர்த்­தீ­யைத் தீய­ணைப்­பா­ளர்­கள் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். புதர்த்­தீ­யால் அங்கு குறைந்­தது 86 வீடு­கள் தீக்­கி­ரை­யா­கின.

பாது­காப்­பான இடங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் வீடு திரும்­பு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. புதர்த்­தீ­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­ட­போது ஏழு தீய­ணைப்பு வீரர்­க­ளுக்கு இலே­சான காயங்­கள் ஏற்­பட்­டன. எனி­னும், தீச்­சம்­ப­வத்­தால் எவ­ரும் மர­ணம் அடைந்­த­தாக தக­வல் இல்லை. கடந்த திங்­கட்­கி­ழமை தொடங்­கிய புதர்த்­தீ­யால் 10,000 ஹெக்­ட­ருக்­கும் அதி­க­மான நில­ப­ரப்பு தீக்­கி­ரை­யாகி­விட்­டது.