ஆட்சிக்கவிழ்ப்பு எதிரொலி: 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு மியன்மாரில் ஆகப்பெரிய போராட்டம்

ஆட்சிக்கவிழ்ப்பு எதிரொலி: 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு மியன்மாரில் ஆகப்பெரிய போராட்டம்

2 mins read
753900a7-f9b1-4524-abdc-4a102aa4226a
ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து யங்கூன் நகரில் நேற்று போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். படம்: ஏஎஃப்பி -

மியன்­மா­ரில் ஆட்­சிக்­ கவிழ்ப்பை எதிர்த்து நேற்று இரண்­டா­வது நாளாக யங்­கூன் நக­ரில் பல்லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பேர­ணி­யா­கச் சென்­ற­னர். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வென்ற திருவாட்டி ஆங் சான் சூச்சி வீட்டுக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டு உள்ளார். அவர் விடு­விக்­கப்­பட வேண்­டும் எனக் கோரி நாடு முழு­வ­தும் மேலும் பல்­லா­யி­ரக்­கணக்­கானோர் வீதி­களில் திரண்­ட­னர்.

மியன்­மா­ரில் 2007ஆம் ஆண்­டில் பௌத்த பிக்­கு­கள் வழி­ந­டத்­திய 'சஃப்ரொன்' புரட்­சிக்­குப் பிறகு நடத்­தப்­பட்ட ஆகப்­பெ­ரிய போராட்­டங்­கள் இவை. மியன்­மார் ராணு­வம் நேற்று முன்­தி­னம் இணை­யத் தொடரை முடக்­கிய நிலை­யி­லும் போராட்­டங்­கள் தொடர்ந்தன.

மியன்­மா­ரின் ஆகப்­பெ­ரிய நக­ரான யங்­கூ­னில் சிவப்பு பலூன்­களை ஏந்­தி­ய­வாறு, "ராணுவ சர்­வா­தி­கார ஆட்சி எங்­க­ளுக்கு வேண்­டாம்! எங்­க­ளுக்கு ஜன­நாயகம் வேண்­டும்!" எனக் கூட்­டத்­தி­னர் முழக்­க­மிட்­ட­னர். மியன்­மா­ரில் கடந்த ஆண்டு நவம்­பர் 8ஆம் தேதி நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் பெரி­ய­ள­வில் வெற்றி பெற்ற திரு­வாட்டி சூச்­சி­யின் தேசிய ஜனநாயக இயக்கக் கட்சி­யின் நிற­மா­னது சிவப்பு. அந்­தத் தேர்­த­லில் முறை­கேடு நடந்­த­தாக குறை­கூ­றிய ராணு­வத் தலை­வர்­கள், தேர்­தல் முடி­வு­களை ஏற்க மறுத்­த­னர்.

போராட்­டக்­கா­ரர்­கள் நேற்று திரு­வாட்டி சூச்­சி­யின் கட்­சிக்­கொ­டி­களை அசைத்­த­வாறு மூன்று விரல்­களை உயர்த்தி, ராணுவ ஆட்­சிக்­கவிழ்ப்பு மீதான தங்­க­ளது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னர்.

ஓட்­டு­நர்­கள் தங்­க­ளது வாக­னங்­களில் ஒலி எழுப்­பி­ய­வா­றும் வாகனப் பய­ணி­கள் திரு­வாட்டி சூச்­சி­யின் படங்­களை ஏந்­தி­ய­வா­றும் சென்­ற­னர்.இணை­யத் தொடர்பு நேற்று பிற்பகல் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­ய­தைத் தொடர்ந்து, போராட்­டங்­களைக் காட்­டும் சில காட்­சி­கள் நேற்று ஃபேஸ்புக்­கில் நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டன. அந்­தக் காட்­சி­க­ளைக் காணொளி எடுத்த ஒரு­வர், நாட்­டில் ஆக அண்­மைய நில­வ­ரத்­தைப் போராட்­டக்­கா­ரர்­களிடம் கொண்டு சேர்ப்­ப­தன் மூலம் அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க முடி­யும் எனக் கூறி­னார்.

யங்­கூ­னில் இருந்து ஏறக்குறைய 350 கிலோ மீட்­ட­ர் வடக்கே உள்ள நிர்­வா­கத் தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் ராணு­வத்­தி­டம் இருந்து இந்­தப் போராட்­டங்­கள் குறித்து நேற்று கருத்து எது­வும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தங்­க­ளது எதிர்­கா­லத்­திற்­காக போராட தாங்­கள் வீதி­களில் இறங்­கி­யுள்­ள­தாக போராட்­டக்­கா­ரர்­கள் கூறி­னர். "ராணு­வத்­தி­னர் ஏற்­கெ­னவே இணை­யத் தொடர்பை முடக்­கி­விட்­ட­னர். அவர்­கள் தொடர்ந்து ஆட்சி செய்­தால் கல்வி, வர்த்­த­கம், சுகா­தாரம் போன்ற துறை­க­ளி­லும் பல அம்­சங்­களை அடக்கி ஒடுக்­கு­வர். என­வே­தான் நாங்­கள் போராட்­டத்­தில் குதிக்க வேண்­டி­யி­ருந்­தது," என்று து து எனும் 57 வயது ஆட­வர் ஒரு­வர் கூறி­னார்.