லண்டன்: லண்டன் நகரிலேயே ஆக ஒடுக்கமான வீடு ஒன்று பற்றி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஷெஃபர்ட்'ஸ் புஷ் பகுதியில் ஐந்து மாடிகளுடன் அமைந்துள்ள அந்த வீடு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன் அகலம் 1.6 மீட்டர் மட்டுமே. ஆனாலும் அதன் இன்றைய சந்தை மதிப்பு 950,000 பவுண்ட்.
சிங்கப்பூர் நாணய மதிப்பில் கணக்கிட்டால் $1.7 மில்லியன். பழங்கால கண்ணாடி, விளக்கு களுடன் ஒரு கடையைப்போலவே அதன் நுழைவாயில் உள்ளது. லண்டன் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளதால் இந்த வீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை சரியானது தான் என 'விங்வொர்த்' என்னும் சொத்து நிறுவனம் கூறியுள்ளது.
(படம்: ஏஎஃப்பி)

