வூஹானில் கண்டறிந்தவை விரைவில் வெளியிடப்படும்: உலக நிறுவனம்

வூஹான்: கொரோனா கிருமி தோன்­றிய விதம் குறித்த விசா­ர­ணை­யில் ஈடு­பட்டு வரும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் விஞ்­ஞா­னி­கள், அதில் வூஹான் கட­லு­ண­வுச் சந்­தைக்கு இருக்­கும் பங்கு குறித்த முக்­கிய தடங்­களைக் கண்­ட­றிந்துள்­ள­னர். இது குறித்து நியூயார்க்­கின் விலங்­கி­யல் சிறப்பு மருத்­து­வர் பீட்­டர் டஸாக் கருத்து தெரி­வித்து உள்­ளார். தாம் திட்­ட­மிட்­ட­படி பிப்­ர­வரி 10ஆம் தேதி சீனாவை விட்டு கிளம்­பு­முன் விசா­ர­ணை­யில் கண்­ட­றி­யப்­பட்ட முக்­கிய அம்­சங்­கள் வெளி­யி­டப்­படும் என்­றார் அவர். உலக சுகா­தார நிறு­வ­னம் அனுப்­பிய குழு­வுக்கு இவர் உதவி வரு­கி­றார்.

2019 டிசம்­பர் மாதம் கொவிட்-19 கிருமி உரு­வான சீனா­வின் மத்­திய நக­ரான வூஹா­னில் உரை நிகழ்த்­திய அவர், கிருமி தோன்­றிய விதம் குறித்து தமது 14 உறுப்­பி­னர் குழு சீனா­வின் நிபு­ணர்­க­ளு­டன் இணைந்து முக்­கி­ய­மான இடங்­க­ளுக்­கும் ஆராய்ச்சி மையங்­க­ளுக்­கும் சென்­ற­தா­கக் கூறி­னார்.

இவ்­வி­வ­கா­ரத்­தில் ‘என்ன நிகழ்ந்­தி­ருக்­கிறது என்­பதை உள்­ள­டக்­கிய சில உண்­மை­யான தட­யங்­களை’ கண்­ட­றிய அந்­தப் பய­ணம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார். “நூற்­றாண்டு காணாத மோச­மான நிலைமை உரு­வாகும் முன்­னர் வூஹா­னில் கிருமி பர­வி­யது எவ்­வாறு என்­பதே விசா­ர­ணை­யின் முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. எவ்­வாறு நிகழ்ந்­தது என்­ப­தைப் பற்­றிய ஆழ­மான புரிந்­து­ணர்வு மேலும் இது­போன்ற சம்­ப­வம் நிக­ழா­மல் உத­வும்,” என்­றார் அவர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் உல­க­ள­வில் 105.7 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்­குப் பர­வி­விட்­டது. 2.3 மில்­லி­யன் பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். விலங்குகளில் இருந்து தோன்­றிய கிருமி மனி­தர்­க­ளுக்­குத் தொற்­றிய விதம் குறித்து அறிந்து உத­வு­மாறு கடந்த ஆண்டு மே மாதம் உலக சுகா­தார நிறு­வ­னம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!