மியன்மார் குமுறல் நீடிப்பு; நேற்று ரத்தம் சிந்தியும் இன்றும் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பெருங்­கூட்­ட­மா­கக் கூட விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­யை­யும் மீறி மியன்­மா­ரில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் ஒன்­று­தி­ரண்டு ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக நேற்­றும் தங்­க­ளது எதிர்ப்­பைத் தெரி­வித்­த­னர்.

கூட்­டத்­தி­ன­ரைக் கலைக்க போலி­சார் நேற்­றும் தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்­த­தோடு வானத்தை நோக்கி சுட்டு எச்­ச­ரிக்கை விடுத்­த­னர். இருப்­பி­னும் அத்­த­கைய எச்­ச­ரிக்­கை­களை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கண்­டு­கொள்­ளா­மல் எதிர்ப்பு முழக்­கங்­க­ளைத் தொடர்ந்து எழுப்­பி­னர்.

நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க வானத்தை நோக்கி போலிசார் சுட்டபோது ரப்பர் குண்டுகள் பாய்ந்து நால்வர் ரத்தம் சிந்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், இன்றும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் யங்கூன் சாலைகளில் திரண்டனர்.

சுமார் 53 மில்­லி­யன் பேர் வசிக்­கும் தென்­கி­ழக்கு நாடான மியன்­மா­ரில் இம்­மா­தம் 1ஆம் தேதி ஆட்­சிக்­க­விழ்ப்பு நடத்தி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது ராணு­வம். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மியன்­மார் அர­சாங்க ஆலோ­ச­கர் ஆங் சான் சூச்சி உள்­ளிட்ட தலை­வர்­களை ராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் கைது செய்­த­னர். அப்­போது முதல் மக்­கள் ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தில் ஈடு­பட்டு வரு­வ­தால் மருத்­து­வ­

ம­னை­கள், பள்­ளிக்­கூ­டங்­கள், அர­சாங்க அலு­வ­ல­கங்­கள் உள்­ளிட்­டவை பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்பு நட வடிக்­கை­களும் முடங்­கி­விட்­டன.

நான்­கா­வது நாளாக நேற்று போராட்­டம் நடை­பெற்ற போது நேபிடா நக­ரில் வான் நோக்கி போலி­சார் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தைக் கண்­ட­தாக பல­ரும் ஊட­கங்­க­ளி­டம் கூறி­னர். துப்­பாக்­கிச் சத்­தம் கேட்டு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் சிதறி ஓடி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தி­யி­டம் ஒரு­வர் தெரி­வித்­தார். ஆயி­னும் துப்­பாக்­கி­யில் ரப்­பர் தோட்­டாக்­களை மட்­டும் பயன்­ப­டுத்­தி­ய­தாக பின்­னர் ஊட­கங்­க­ளி­டம் போலி­சார் விளக்­கி­னர்.

அதற்­கி­ணங்க, ரப்­பர் தோட்டா பாய்ந்த சந்­தே­கத்­தின் பேரில் காயங்­க­ளு­டன் மூவர் நேற்று நேப்பிடா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ள­தாக மருத்­து­வர் ஒரு­வர் கூறி­னார். அவர்­க­ளுக்கு முதற்­கட்ட சிகிச்சை அளித்­துக்­கொண்­டி­ருந்த வேளை­யில் தலைக் காயத்­து­டன் மற்­றொ­ருவர் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் பெரிய மருத்­து­வ­ம­னைக்கு அவர் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­க­வும் பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த மருத்­து­வர் தெரி­வித்­தார். முன்­ன­தாக, தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்த போலி­சாரை நோக்கி கூட்­டத்­தி­னர் கையில் கிடைத்த பொருட்­களை வீசி­ய­தாக ஒரு தக­வல் தெரி­வித்­தது.

மேலும், பீய்ச்­சி­ய­டிக்­கப்­படும் தண்­ணீர் தங்­கள் மீது படா­மல் இருக்க போராட்­டக்­கா­ரர்­கள் சிலர் பிளாஸ்­டிக் விரிப்­பு­க­ளால் தங்­களை மூடிக்­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!