இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் ஹாங்காங்வாசிகள் வெளிநாட்டு தூதரக உதவிகளுக்கு தகுதிபெற மாட்டார்கள் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.
இங்கு குடியிருப்போர் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கலாம்.
ஆயினும் சீனாவின் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் இரட்டைக் குடியுரிமை அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே இங்குள்ள அனைவரும் சீனர்கள் என்றே கருதப்படுவர்,” என அவர் நேற்று கூறினார்.