இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா விமான விபத்து: கட்டுப்பாட்டு அமைப்பில் பிரச்சினை

இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா விமான விபத்து: கட்டுப்பாட்டு அமைப்பில் பிரச்சினை

1 mins read
2b813c18-b559-4383-a11e-ded11fd812fa
தானியக்க கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்று விமான பாதுகாப்பு விசாரணைக் குழுவின் தலைவர் கேப்டன் நூர்காஹியோ உட்டோமோ தெரிவித்தார். படம்: இபிஏ -

இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா பயணிகள் விமான விபத்திற்கு அதன் முக்கிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தானியக்க கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்று விமான பாதுகாப்பு விசாரணைக் குழுவின் தலைவர் கேப்டன் நூர்காஹியோ உட்டோமோ தெரிவித்தார்.

விமான விபத்திற்கு வானிலை காரணம் என்று கூறப்படுவதை அவர் நிராகரித்தார்.

ஸ்ரீ விஜயா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 27 ஆண்டுகள் பழமையான போயிங் 737-500 விமானம் கடந்த மாதம் 9ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

புறப்பட்ட நான்கு நிமிடத்திலேயே அந்த விமானம் ஜாவா கடலில் நொறுங்கி விழுந்தது. இதையடுத்து அதில் பயணம் செய்த 62 பேரும் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

கடலில் மிதந்த விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி உள்ளிட்ட அதன் பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் விமானி அறையில் உள்ள குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்