ஜப்பான் நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் காயம்

1 mins read
f5982791-5a4b-4768-91e0-fd095176e338
நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த சுவர். படம்: ராய்ட்டர்ஸ் -

இவாக்கி: ஜப்பானில் நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ரிக்டர் அளவில் 7.3 நிலநடுக்கம் காரணமாக ஃபுக்குஷிமாவில் உள்ள வீடுகளின் சன்னல்கள் நொறுங்கின. வீட்டுச் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டன. அதுமட்டுமல்லாது, நிலச்சரிவும் ஏற்பட்டது.

2011ஆம் ஆண்டில் ஃபுக்குஷிமாவில் இதே போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து அங்கு சுனாமி ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக வடகிழக்கு ஜப்பானின் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தலைநகர் தோக்கியோவில் உள்ள கட்டடங்களில் இருந்தோரால் உணர முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.