மலேசியாவில் தடுப்பூசித் திட்ட வழிகாட்டி அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா: தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்ட வழிகாட்டியை மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் நாளை அறிமுகப்படுத்துகிறார்.

மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் இம்மாதம் தொடங்குகிறது. தடுப்பூசி மருந்து வாங்கும் உத்தி, தடுப்பூசி போடுவதை நடைமுறைப்படுத்துவது போன்றவை தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெறும்.

இந்நிலையில், தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை ஆதரிக்குமாறு மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசி பற்றி பரவி வரும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது என்று அவர் உறுதி அளித்தார்.

தடுப்பூசி பற்றி வலம் வரும் பல வதந்திகளில் துளியளவும் உண்மையில்லை என்றார் அவர். அறிவியலைக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!