13 துருக்கியர்களின் உடல்கள் கண்டெடுப்பு

13 துருக்கியர்களின் உடல்கள் கண்டெடுப்பு

1 mins read

இஸ்தான்புல்: குர்தியப் போராளிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது குகைக்குள் 13 துருக்கியர்களின் சடலங்களைக் கண்டெடுத்ததாக துருக்கிய ராணுவம் தெரிவித்துள்ளது. மாண்ட 13 பேரும் கடத்தப்பட்டவர்கள் என்று துருக்கிய தற்காப்பு அமைச்சர் ஹுலுசி அகார் கூறினார். அதிரடி நடவடிக்கையில் 48 குர்தியப் போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்று துருக்கிய ராணுவ வீரர்கள் மாண்டனர்.