மலேசியாவில் 1,000ஐ கடந்த கொவிட்-19 உயிரிழப்புகள்

மலேசியாவில் 1,000ஐ கடந்த கொவிட்-19 உயிரிழப்புகள்

1 mins read
81734488-f9a7-498a-8f98-82f19612d421
மலேசியாவில் இன்று (பிப்ரவரி 17) புதிதாக 2,998 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் இன்று (பிப்ரவரி 17) புதிதாக 2,998 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 272,163 ஆனது.

அதே 24 மணி நேரத்தில் கொவிட்-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 கூடி மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,005 ஆனது.

மேலும் 5,709 பேர் கொவிட்-19லிருந்து விடுபட்டு வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து கொவிட்-19லிருந்து விடுபட்டோரின் மொத்த எண்ணிக்கை 227,762 ஆனது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 231 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 115 பேருக்கு செயற்கை சுவாச ஆதரவு தேவைப்பட்டது.

குறிப்புச் சொற்கள்