மலேசியாவின் லங்காவி தீவிற்கு அருகில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான 'போசியா' பந்தயப் படகில் மூண்ட தீயை கட்டுக் குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடினர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் உதவிக்கான அழைப்பு வந்ததாக கடலோரக் காவற்படையினர் கூறினர்.
படகில் இருந்த ஏழு பேரும் எந்தக் காயங்களும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.
இந்த படகு பிரபல பிரெஞ்சு படகோட்டியான அலியன் கோலஸுக்காக 1976ல் கட்டப்பட்டது. பின்னர் இது லெபனான் பெண்ணிடம்36.5 மில்லியன் பிராங்குக்கு (S$12 மில்லியன்) விற்கப்பட்ட தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

