மியன்மார் ஆர்ப்பாட்டம்: ஒருவர் பலி

மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் நேற்று ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

கடந்த 9ஆம் தேதி நேப்பிடாவில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது, போலி­சார் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 20 பேர் காய­ம­டைந்­த­னர். அவர்­களில் பெண் உட்­பட இரு­வர் தலையில் பலத்த காய­ம­டைந்­த­னர்.

இத­னைத்­தொ­டர்ந்து தலை­யில் குண்டு தாக்­கிய நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் நேற்று மாண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்­தில் மாண்ட முதல் நபர் இவர்.

உயி­ரி­ழந்த பெண் மியா த்வே த்வே கைங் எனும் 20 வயது மாணவி என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரது இழப்பு மிக­வும் வருத்­த­மாக உள்­ள­தாக அவ­ரது சகோ­த­ரர் யே ஹூட் ஆங் தெரி­வித்­துள்­ளார்.

பெண்­ணிற்குக் காயம் ஏற்­பட்­ட­தற்கு ரப்­பர் குண்டு கார­ணம் அல்ல, உண்­மை­யான குண்டே கார­ணம் என்று மருத்­து­வர் கூறு­கின்­ற­னர்.

எனி­னும், போலி­சா­ரின் அடக்­கு­மு­றைக்கு மத்­தி­யி­லும் மியன்­மார் முழு­வ­தும் ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்ந்து வலுத்து வரு­கின்­றன.

இதற்­கி­டையே, மியன்­மா­ரின் ராணுவ ஆட்­சிக்கு எதிர்ப்பு தெரி­வித்து கனடா, பிரிட்­டன் விதித்­துள்ள தடை­களை ராணுவ எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

மேலும் ஜப்­பான், இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் மியன்­மா­ரில் ஜன­நா­ய­கம் மீண்­டும் மலர வேண்­டும் என்று வலியுறுத்தி வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!