மலேசியாகினிக்கு அபராதம்: 4 மணி நேரத்தில் 500,000 ரிங்கிட் நிதி திரட்டு

மலேசியாகினிக்கு அபராதம்: 4 மணி நேரத்தில் 500,000 ரிங்கிட் நிதி திரட்டு

1 mins read
17081937-a685-4a72-a070-92ebdc5ca428
மலேசியாவின் செய்தி ஊடகமான மலேசியாகினி அபராதத் தொகையைான 500,000 ரிங்கிட் நிதியை நான்கு மணி நேரத்திற்குள் திரட்டியது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் செய்தி ஊடகமான மலேசியாகினி அபராதத் தொகையைான 500,000 ரிங்கிட் நிதியை நான்கு மணி நேரத்திற்குள் திரட்டியது.

அதன் வாசகர்கள் வெளியிட்ட அவமதிக்கக்கூடிய கருத்துகளுக்கு, மலேசியாகினி பொறுப்பேற்று, அபராதமாக 500,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது.

நிதி திரட்டு முயற்சி அறிவிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் சுமார் 505,000 ரிங்கிட் சேர்ந்தது.

அதிக நிதியாக டிஏபி கட்சி 10,000 ரிங்கிட்டும் அதன் 50 உறுப்பினர்கள் ஒவ்வொரும் தலா 1,000 ரிங்கிட்டும் நன்கொடை அளித்தனர்.

பிகேஆர் கட்சி 20,000 ரிங்கிட் நன்கொடை அளித்தது.

குறிப்புச் சொற்கள்