இந்தோனீசியாவில் மெராப்பி எரிமலை வெடித்து, நெருப்புக் குழம்பைக் கக்கியது

இந்தோனீசியாவில் மெராப்பி எரிமலை வெடித்து, நெருப்புக் குழம்பைக் கக்கியது

1 mins read
6afda244-79b1-4862-be29-7a2a7d0a6c19
படம்: ஏஎஃப்பி -

இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள யோகயாக்தா பகுதிக்கு அருகில் இருக்கும் மெராப்பி எரிமலை வெடித்தது. சென்ற இரண்டு நாட்களில் 20க்கு மேற்பட்ட முறை அதிலிருந்து நெருப்புக்குழம்பு வெளியானது.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான சிறிய எரிமலை நிலநடுக்கங்கள் அங்கு ஏற்பட்டதாக இந்தோனீசியாவின் புவியியல் அறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் அப்பகுதியில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை நடப்பில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்