சிறிது நேரம் கிருமிப்பரவல் ஓய்ந்த பின்னர் மலேசியாவின் அன்றாட கொவிட்-19 எண்ணிக்கை மீண்டும் 3,000 ஐத் தாண்டி 3,297 ஐ எட்டியுள்ளது. இவர்களில் 1,402 பேர் மலேசியர்கள் என்றும் 1,889 பேர் வெளிநாட்டவர் என்றும் மலேசியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஐவர் இந்நோயால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மலேசியாவின் ஒட்டுமொத்த கொவிட்-19 மரண எண்ணிக்கை 1,506க்கு உயர்ந்துள்ளது.
இம்முறை, பேராக் மாநிலத்தில் ஆக அதிகமாக கிருமித்தொற்று எண்ணிகி 1,215 ஆக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் அறுவருக்கு வெளிநாட்டில் இக்கிருமி தொற்றியுள்ளது. இதனுடன் மலேசியாவின் ஒட்டுமொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 283, 569 உயர்ந்துள்ளது. 33, 304 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

