ஜோகூர்: கொவிட்-19 சூழலுக்குப் பிந்திய நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் கூறியுள்ளார்.
“தடுப்பூசித் திட்டத்தில் நாடுகள் ஈடுபட்டு வருவதால் பொருளியல் வழக்கநிலையை எட்டும். அந்த மாற்றத்தின் பலனை ஜோகூரும் பெறவேண்டும்,” என்று சீனப் புத்தாண்டு தொடர்பான நேர்
காணல் ஒன்றில் அவர் கூறினார்.
“வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தற்போது அதிக போட்டித்தன்மையுடன் இருப்பதை ஜோகூர் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதலீட் டாளர் எந்த நாட்டினர் என்கிற ஆராய்தல் தேவை இல்லை. அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு சிற்றரசுகள், தைவான், சீனா என எந்த நாட்டினரும் நிபுணத்துவ ரீதியாக முதலீடு செய்ய முன்வந்தால் நாம் அதனை வரவேற்க வேண்டும்,” என்றார் சுல்தான்.