பாகங்கள் உடைந்து விழுந்தாலும் விமானமும் பயணிகளும்...

பாகங்கள் உடைந்து விழுந்தாலும் விமானமும் பயணிகளும்...

1 mins read
b9e373a3-54df-440d-a784-decd7969ab77
கொலராடோ மாநிலம் புரூம்­ஃபீல்ட் நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது சிதறி விழுந்த விமான பாகங்கள். படம்: இபிஏ -

வாஷிங்­டன்: யுனை­டெட் ஏர்­லைன்ஸ் விமா­னம் ஒன்று நேற்று முன்­தி­னம் இயந்­தி­ரக் கோளாறு கார­ண­மாக அவ­ச­ர­மா­கத் தரை இறங்­கி­யது.

மேற்கு அமெ­ரிக்­கா­வில் உள்ள டன்­வெர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் இருந்து ஹோன­லூலு நகரை நோக்­கிப் பறக்­கத் தொடங்­கிய விமா­னம் சிறிது நேரத்­தி­லேயே திரும்பி வந்­தது.

அப்­போது அந்த விமா­னத்­தில் 231 பய­ணி­களும் 10 விமா­னச் சிப்­பந்­தி­களும் இருந்­த­னர்.

விமா­னம் திரும்பி வந்­த­போது அதி­லி­ருந்து சில பாகங்­கள் புரூம்­ஃபீல்ட் நக­ரில் தரையை நோக்கி விழுந்­தன. இருப்­பி­னும் விமா­னம் பத்­தி­ர­மாக தரை இறங்­கி­யது.

யாருக்­கும் காய­மில்லை என அறி­விக்­கப்­பட்­டது.

விமா­னத்­தி­லி­ருந்து கீேழ விழுந்த பாகங்­களில் இயந்­தி­ரத்­தின் உலோக மூடி­யும் அடங்­கும். வீடு ஒன்­றின் மீது அது விழுந்­தது.

மேலும் சில பாகங்­கள் புல்­வெ­ளி­யில் சிதறி விழுந்­ததை புரூம்­ஃபீல்ட் போலிஸ் வெளி­யிட்ட படங்­கள் காட்­டின.