அமெரிக்க-சீன உறவை புலப்படுத்தும் சந்திப்பு

லண்­டன்: ஐநா பாது­காப்பு மன்­றம் நாளை (பிப்­ர­வரி 23) உல­கத் தலை­வர்­க­ளின் உச்­ச­நி­லைக் கூட்­டம் ஒன்றை நடத்த உள்­ளது. பரு­வ­நிலை மாற்­றங்­கள் உலக நாடு­க­ளின் அமை­தி­யில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கங்­கள் குறித்து 15 உறுப்பு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள் அக்­கூட்­டத்­தில் பங்­கேற்று கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­வார்­கள்.

இணைய காணொளி வழி­யாக நடை­பெற இருக்­கும் இந்­தக் கூட்­டத்­திற்கு பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

பாது­காப்பு மன்­றத்­தின் தலை­மைத்­து­வம் சுழற்சி முறை­யில் மாறிக்­கொண்டே வரும். தற்­போது பிரிட்டன் அதனை ஏற்­றுள்­ளது. அமெ­ரிக்க பரு­வ­நிலை நிபு­ணர் ஜான் கெரி, சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி, பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மக்­ரோன், அயர்­லாந்து, வியட்­னாம், நார்வே ஆகிய நாடு­க­ளின் பிர­த­மர்­கள் உள்­ளிட்ட தலை­வர்­கள் இதில் பங்­கேற்­கின்­ற­னர்.

அமெ­ரிக்க-சீன உற­வின் நிலை குறித்து இந்­தக் கூட்­டத்­தின் வாயி­லாக தெரிந்­து­கொள்­ள­லாம் என ஐநா தூதர் ஒரு­வர் கூறி­னார். அதி­கார பல­மிக்க அவ்­வி­ரண்டு நாடு­களும் ஒப்­புக்­கொள்ள வேண்­டிய சில பிரச்­சி­னை­களும் விவா­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!