தடுப்பூசி பாஸ்போர்ட்: ஏர் நியூசிலாந்து சோதனை

எல்லைகளுக்கு இடையே விமானப் பயணிகள் எளிதில் பயணம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார விவரங்கள் அடங்கிய புதிய பயணச்சீட்டை விநியோகிப்பது குறித்து ஏர் நியூசிலாந்து நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ எனும் அந்தத் திட்டம் விரைவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒரே இடத்தில் சுகாதாரச் சான்றிதழ் பற்றிய விவரங்களை பதிவு செய்வதால் பயணிகள் தங்குத்தடையின்றி எல்லைகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ள முடியும்.

தற்போதைய காலக்கட்டத்தில் பயணிகளின் சுகாதாரச் சான்றுகளை விமான நிறுவனங்கள் பகிர்ந்துகொள்வது மிகவும் அவசியம் என்று ஏர் நியூசிலாந்தின் மின்னிலக்கத் துறையின் தலைமை அதிகாரி ஜெனிஃபர் செபுல் கூறியுள்ளார்.

அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் உருவாக்கிய செயலி மூலம் இது செயல்படும்.

எட்டிஹாட், எமிரேட்ஸ் போன்ற விமான நிறுவனங்களும் இந்த முன்னோடித் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!