காட்டுத் தீ: இந்தோனீசிய அதிபர் எச்சரிக்கை

இவ்வாண்டு காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் ஆங்காங்கே காட்டுத் தீ தென்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் இந்தோனீசியாவில் மிகப் பெரிய அளவிலான காட்டுத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அவற்றின் காரணமாக ஓராங் உத்தான், புலிகள் போன்ற அருகிவரும் விலங்குகள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டது. 96 விழுக்காடு காட்டுத் தீ சம்பவங்கள் மனிதர்களால் ஏற்படுகின்றன. கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்றே காட்டுத்  தீ சம்வபவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன,” என்று அதிகாரிகளுடன் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின்போது அதிபர் ஜோக்கோவி தெரிவித்தார்.

பணத்தை மிச்சப்படுத்த அடுத்த பயிரிடுதலுக்குத் தயாராகும் நோக்கில், நிலத்தில் உள்ள மரம், பயிர் எச்சங்களை விவசாயிகள் தீவைத்து கொளுத்திவிடுவதாக அவர் கூறினார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon