தடுப்பூசித் திட்டம் எல்லை திறப்புக்கு உதவும்: ஜோகூர் முதல்வர்

மலே­சி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான பய­ணத்தை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துச் செல்ல உத­வும் என்று ஜோகூர் மாநில அர­சாங்­கம் கரு­து­கிறது.

இரு நாட்டு எல்­லை­யைத் திறக்­கும் நட­வ­டிக்கை ஜோகூ­ரின் பொரு­ளி­யலை ஊக்­கப்­ப­டுத்­துவ­தில் முக்­கிய பங்கு வகி­க்கும் என்று அதன் முதல்­வர் ஹாஸ்னி முகம்­மது தெரி­வித்து உள்­ளார்.

“இரு நாடு­க­ளின் மக்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் சிங்­கப்­பூர்-மலே­சியா இடை­யி­லான அவர்­க­ளின் நட­மாட்­டம் எளி­தா­ன­தா­க­வும் பாது­காப்­பா­ன­தா­க­வும் அமை­யும்,” என்­றார் அவர்.

மலே­சியா கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல்­மு­றை­யாக நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யைப் பிறப்­பித்­தது முதல் சிங்­கப்­பூ­ரு­ட­னான அதன் எல்லை மூடப்­பட்டு உள்­ளது. தற்­போது சரக்கு வாக­னங்­கள் மட்­டும் தரை வழி­யாக தின­மும் எல்லை கடந்து வர­வும் செல்­ல­வும் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.

மாநிலம் முழு­வ­தும் ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்ள மையங்­களில் தடுப்­பூசி போடும் திட்­டத்­திற்கு தமது அர­சாங்­கம் தயா­ராகி வரு­வ­தா­க­வும் திரு ஹாஸ்னி கூறி­னார்.

திட்­டம் தொடங்­கும்­போது தாமும் தமது நிர்­வாக மன்­றத்­தில் உள்­ளோ­ரும் தடுப்­பூ­சிப் போட்­டுக் கொள்ள இருப்­பதாக அவர் தெரிவித்­தார்.

மலே­சியா முதல் தவ­ணை­யாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 300,000 முறை போடக்­கூ­டிய ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூ­சி­யைப் பெற்­றுக்­கொண்­டது.

மேலும் 182,520 முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சியை அது இன்று புதன்கிழமை பெறக்­கூ­டும் என்று பெர்னாமா செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்டது.

நாளை மறு­தி­னம் வெள்­ளிக் கிழமை தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கத் திட்­ட­மிட்­டி­ருந்த மலே­சியா முன்­கூட்டியே இன்று புதன்­கி­ழமை அத­னைத் தொடங்­கும் என்று தடுப்­பூ­சித் திட்­டத்தை வழிநடத்­தும் அமைச்­சர் கைரி ஜமாலுதீன் அறி­வித்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!