அமெரிக்காவில் 500,000ஐக் கடந்த கொவிட்-19 மரணங்கள்; அஞ்சலி செலுத்திய பைடன்

கொவிட்-19 கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் மாண்­டோர் எண்­ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது. அமெ­ரிக்­கா­வில்­தான் ஆக அதி­க­மான கொவிட்-19 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. மாண்­டோ­ருக்கு அஞ்­சலி செலுத்தி உரை­யாற்­றி­னார் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன்.

“இத்­த­கைய கொடூ­ர­மான நிலையை அமெ­ரிக்­கர்­க­ளால் ஏற்க முடி­ய­வில்லை. இருப்­பி­னும், ஏற்­பட்­டுள்ள பேரி­ழப்­பால் அமெ­ரிக்கா முடங்­கி­வி­டா­த­படி பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

“இந்த இழப்பை நினை­வில் வைத்­துக்­கொள்­ளும்­படி அனைத்து அமெ­ரிக்­கர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். மாண்­ட­வர்­க­ளை­யும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரை­யும் நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள்,” என்­றார் திரு பைடன்.

மாண்­டோ­ருக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் வெள்ளை மாளி­கை­யின் வாச­லில் மெழு­கு­வர்த்­தி­கள் ஏற்­றப்­பட்­டி­ருந்­தன.

அதி­பர் ஜோ பைடன், அவ­ரது மனைவி ஜில் பைடன், துணை அதி­பர் கமலா ஹாரிஸ், அவ­ரது கண­வர் டக் எம்­ஹாஃப் ஆகி­யோர் மெழு­கு­வர்த்­தி­கள் அரு­கில் நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்­சலி செலுத்­தி­னர். 28.1 மில்­லி­யன் அமெ­ரிக்­கர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

“இன்று மனதை சுக்­கு­நூ­றாக உடைக்­கும் நிலை அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­றால் 500,071 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

“மர­ணம் அடைந்­த­வர்­கள் சாதா­ரண அமெ­ரிக்­கர்­கள் என பலர் கூறு­வ­தைக் கேட்­டுள்­ளேன். சாதா­ரண அமெ­ரிக்­கர்­கள் என யாரும் கிடை­யாது. மாண்­ட­வர்­கள் சாமா­னி­யர்­கள் அல்லர். அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தனித்­தன்­மை­வாய்ந்­த­வர்­கள். அவர்­க­ளது முன்­னோர்­கள் அமெ­ரிக்­கா­வில் வாழ்ந்­த­வர்­கள். சிலர் அமெ­ரிக்­கா­வில் பிறந்­த­வர்­கள், சிலர் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்­த­வர்­கள். மாண்­ட­வர்­களின் உயிர் அமெ­ரிக்­கா­வில் பிரிந்தது,” என்­று அதி­பர் பைடன் நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

மாண்­டோ­ருக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் தலை­ந­கர் வாஷிங்­ட­னில் 500 தடவை மணி ஒலிக்­கப்­பட்­டது. இதற்­கி­டையே, தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்கியதி­லி­ருந்து அமெரிக்காவில் கொவிட்-19ஆல் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!