ஃபைசர் தடுப்பூசி மருந்து 94% ஆற்றல் கொண்டது என ஆய்வில் முடிவு  

வா‌ஷிங்டன்: ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி மருந்து 94 விழுக்காடு திறன்பெற்றது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இஸ்ரேலில் 1.2 மில்லியன் பேரை உட்படுத்தி நடத்தப்பட்ட முழு அளவிலான உண்மையான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் மருத்துவ சஞ்சிகை இன்று இந்த ஆய்வறிக்கையின் முடிவை வெளியிட்டது.

ஃபைசர் மருந்து தொற்றுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை அளிக்கும் ஆற்றல் மிக்கது என சோதனை மூலம் தெரியவந்ததாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.

இந்தத் தடுப்பூசி மருந்துகள் போட்டுக்கொண்ட அனைவருக்கும் நல்ல முறையில் தொற்றுத் தடுப்பாற்றலை இந்த மருந்து கொடுத்துள்ளது.

எனவே, உலகை அச்சுறுத்தி வரும் இந்த கொடுநோய்த் தொற்றை விரைவில் விரட்டியடிக்கும் அருமருந்தை நாம் பெற்றுள்ளோம் என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் தொற்றுயியல் ஆய்வாளர் பென் நியூமேன் கூறியுள்ளார்.

ஃபைசர் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வு 2020 டிசம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனின் உருமாறிய கொரோனா தொற்று இஸ்ரேலில் பரவத்தொடங்கிய காலக்கட்டத்தில் இந்த தடுப்பூசி உருமாறிய கொரோனா பாதிப்பைத் தடுக்குமா என்று தடுப்பூசி மருந்தின் திறன் குறித்து அதிக கேள்விகள் எழுந்தன. அதனையடுத்து இந்தத் தடுப்பூசித் திறன் குறித்து அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்காக 1.2 மில்லியன் பேரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை ஒத்த வயது, பாலினம், நாடு, நோய் மற்றும் இதர குணாதிசயங்கள் போன்றவற்றை ஒப்பிட்டு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறியது.

கிளாலிட் ஆய்வுக்கழகத்தின் தொற்றுநோய் மற்றும் ஆய்வுப்பிரிவின் தலைவர் நோயம் பர்டா கூறுகையில், நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இது உண்மையிலேயே உன்னதமான, வலுவான சோதனை முறை என்றே கூறவேண்டும் என்று பாராட்டியுள்ளார்.

இந்தத் தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்டவர்களுக்கு கொவிட்-19 மட்டுமல்லாது வேறுவகையான நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 92 விழுக்காடு குறைவே என்று இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!