மியன்மாருக்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தியது

அர­சாங்­கத்தை ராணு­வம் கைப்­பற்­றி­யது முதல் மியன்­மார் போராட்­டக்­க­ள­மாக மாறி­விட்­டது. மூன்று வார கால­மாக ஒவ்­வொரு நாளும் ராணுவ ஆட்­சிக்கு எதி­ரான போராட்­டம் நடை­பெற்று வரு­கிறது.

வியா­ழக்­கி­ழமை ராணுவ ஆட்­சிக்கு ஆத­ர­வான சுமார் 1,000 பேர் எதிர்ப்­பா­ளர்­க­ளை ஒடுக்க கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.

கையில் கத்­தி­யு­ட­னும் கற்­களை வீசி­யும் போராட்­டத்­திற்கு எதிர் போராட்­டம் நடத்­தி­ய­தால் யங்­கூன் நக­ரம் பெரும் பதற்­றத்­தில் மூழ்­கி­யது. இரு­வ­ருக்­குக் கத்­திக்­குத்து விழுந்­ததை காணொ­ளிப் படங்­கள் காட்­டின.

பல இடங்­களில் துப்­பாக்­கித் தோட்டா வெடிக்­கும் சத்­தம் கேட்­ட­தா­க­வும் பின்­னி­ரவு 2 மணி வரை சில பகு­தி­களில் போலிஸ் படை காணப்­பட்­ட­தா­க­வும் சம்­ப­வங்­களை நேரில் கண்­ட­வர்­கள் ஊட­கங்­க­ளி­டம் கூறி­னர்.“நாங்­கள் பயத்­தில் உறைந்­தி­ருந்­தோம்,” என்று ஒரு குடி­யி­ருப்­பா­ளர் கூறி­னார்.

வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பத்து பெண்­கள் உள்­ளிட்ட 23 பேர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட இருப்­ப­தாக அர­சாங்க ஊட­கம் கூறி­யது.

இந்­நி­லை­யில், ராணுவ ஆட்சி ஏற்­பட்ட பின்­னர் அங்­குள்ள திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான நிதி உத­வியை உலக வங்கி நிறுத்தி உள்­ளது. மிக­வும் எச்­ச­ரிக்­கை­யான போக்கு கடைப்­பி­டிக்­கப்­படும் என்­றும் அவ­ச­ர­கால கொரோனா நிவா­ர­ணத் திட்­டம் உள்­ளிட்ட முன்­னர் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட திட்­டங்­க­ளுக்­கான உதவி தொட­ரும் என்­றும் உலக வங்கி தலை­வர் ேடவிட் மால்­ பாஸ் அண்மையில் கூறி இருந்­தார்.

இதற்­கி­டையே, அர­சாங்க ஊழி­யர்­களும் போராட்­டத்­தில் பங்­கெ­டுத்­துள்­ள­தால் அர­சாங்க அலு­வ­ல­கங்­கள் வெறிச்­சோடி காணப்­ப­டு­கிவதாகவும் பொது மருத்­து­வ­ம­னை­க­ளில் ஆள் நடமாட்டம் இல்லை எனவும் ஏஎஃப்பி செய்தி கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!