ஆக்ஸிஜன் பற்றாக்குறை: ஏழை நாடுகளுக்கு உதவ வலியுறுத்து

ஏழை நாடு­க­ளின் மருத்­து­வ­ம­னை­கள் ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­கின்­றன. அத­னால் 500,000க்கும் அதி­க­மான கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு ஒவ்­வொரு நாளும் ஆக்­ஸி­ஜன் சிகிச்சை தேவைப்­ப­டு­கிறது. மேலும் சில நாடு­களில் ஆக்­ஸி­ஜன் கிடைப்­பதே குதி­ரைக்­கொம்­பாக உள்­ளது. இவ்­வா­றான நிலை­யில் அந்த நாடு­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

இது­போன்ற நாடு­களில் நோயா­ளி­கள் உயி­ரி­ழப்­பது தவிர்க்­கப்­பட வேண்­டும் என்று உல­க சுகா­தார நிறு­வ­னம் அக்கறை தெரி­வித்­துள்­ளது.

மெக்­சிகோ நாட்­டின் மருத்­து­வ­மனை­களில் ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­கு­றை­யால் கொவிட்-19 நோயா­ளி­கள் வீட்­டில் தங்கி, சிகிச்சை அளிக்­கப்­ப­டா­மல் மாண்­டு­வி­டும் நிலை ஏற்­ப­டு­கிறது.

எகிப்து நாட்­டின் மருத்­து­வ­ம­னை­களில் கடந்த மாதம் ஆக்­ஸி­ஜன் விநி­யோ­கம் தடை­பட்­ட­தால் நோயா­ளி­க­ளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல் பிரே­சி­லின் அமே­சோ­னாஸ் மாநி­லத்­தில் மருத்­து­வ­மனை­களில் ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­குறை­யால் ஏரா­ள­மான தொற்று நோயா­ளி­கள் மர­ணத்­தைத் தழு­வி­னர். ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­கு­றையை ஒரு துய­ரச்­சம்­ப­வம் என்­றும் அதைப்­போக்­குவதற்கு அர­சாங்­கம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்து நிலை­க­ளி­லும் மோச­மான தோல்­வி­யைச் சந்­தித்­துள்­ளது என்­றும் அந்­நாட்­டின் சுகா­தார முறைப்­ப­டுத்­தும் முக­வை­யின் இயக்­கு­நர் டாக்­டர் அலெக் மச்­சாடோ கேம்­பஸ் கூறி­யுள்­ளார். ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­குறையை போக்க சிறப்­புப் பணிக்­குழு ஒன்றை அமைத்­துள்­ளது உல­கச் சுகா­தார நிறு­வ­னம். இந்­தப் பணிக்­குழு, ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­குறையை எதிர்­நோக்­கும் ஆப்­கா­னிஸ்­தான், மலாவி, நைஜீ­ரியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு உதவ US$90 (S$119.31) மில்­லி­யன் ஒதுக்­கி­யுள்­ளது. அடுத்த 12 மாதங்­களில் உல­கம் முழு­வ­தும் ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கும் நாடு­க­ளுக்கு உதவ US$1.6 பில்­லி­யன் செல­வா­கும் என்று அந்த நிறு­வ­னம் கணித்துள்ளது. பல நாடு­கள் கொவிட்-19 நெருக்­கடிக்கு முன்­பி­ருந்தே ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்கி வரு­கின்­றன. அந்த நாடு­க­ளுக்கு அவ­ச­ர­கால உதவி அடிப்­ப­டை­யில் நிதி வழங்­கப்­படும் என ஜெனி­வாவை மைய­மா­கக் கொண்ட உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் டாக்­டர் பிலிஃப் டன்­டன் கூறி­யுள்­ளார். நாம் ஒரு நிலை­யான கடப்­பாட்­டு­டன் ஏழை நாடு­க­ளுக்கு உத­வு­வ­தற்கு ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்க ஒன்­றி­ணைய வேண்­டும் என்று அவர் உலக நாடு­க­ளைக் கேட்­டுக் கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!