தாய்லாந்து அமைச்சர்கள் மூவருக்கு பிணை

பேங்காக்: தாய்­லாந்­தில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடு தழு­விய ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றதை அடுத்து அங்கு ராணு­வம் அப்­போ­தைய ஆட்­சி­யைக் கவிழ்த்­து­விட்டு ராணுவ ஆட்­சியை அமைத்­தது.

அந்த ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்­து­கொண்டு ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு வழி­விட்­ட­தா­கக் கூறி மூன்று அமைச்­சர்­கள் மீது கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. மக்­கள் ஜன­நா­யக சீர்­தி­ருத்த இயக்­கம் என்ற அமைப்­பைச் சேர்ந்த மின்­னி­லக்க அமைச்­சர் புட்­டி­போங் புன்னா­கந்தா, கல்வி அமைச்­சர் நாட்­ட­போல் தீப்­சு­வான், துணை போக்­கு­வ­ரத்து அமைச்­சர் தாவோர்ன் செனி­யாம் ஆகி­யோர் குற்­றம் புரிந்­துள்­ள­னர் எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு தாய்­லாந்து குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் புதன்­கி­ழ­மை­யன்று சிறை­வா­சம் விதித்­தது.

அந்த மூன்று அமைச்­சர்­க­ளுக்­கும் தற்­போது பிணை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர்­க­ளின் வழக்­க­றி­ஞர் கூறி­யுள்­ளார். இந்த மூவ­ரும் பின்­னர் பிர­த­மர் சான் ஓ சா தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர்­க­ளா­கப் பத­வி­யேற்­ற­னர்.

இவர்­களும் மக்­கள் ஜன­நா­யக சீர்­தி­ருத்த இயக்­கத்­தைச் சேர்ந்த மற்­ற­வர்­களும் கிளர்ச்­சி­யில் ஈடு­பட்­டது, தேர்­த­லுக்கு இடை­யூறு விளை­வித்­தது, ஆர்­பாட்­டங்­க­ளின்­போது அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் புகுந்­தது போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் அவர்­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்த அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் தாய்­லாந்து மன்­னர் ஆத­ர­வா­ளர்­கள், தாய்­லாந்து தேசியவாதிகள் எனக் கூறிக் கொள்­ப­வர்­க­ளைத் திரட்டி தற்­போ­தைய பிர­த­மர் சான் ஓ சா பத­விக்கு வரு­வ­தற்கு உத­வி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

அதன்­பின்­னர், திரு சான் ஓ சா தாய்­லாந்து நாட்­டில் 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் வெற்றி பெற்று பிர­த­மர் பத­வி­யில் நீடித்து வரு­கி­றார்.

எனி­னும், அந்த ஆண்டு நடை­பெற்ற தேர்­தல் ராணு­வம் பத­விக்கு வர ஏது­வாக பார­பட்­ச­மான முறை­யில் நடந்­த­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்­டு­கின்­றன. இதை பிர­த­மர் சான் ஓ சா மறுத்­துள்­ளார்.

எனி­னும், குற்­ற­வா­ளி­கள் எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட இந்த அமைச்­சர்­களும் இயக்­கத்­தைச் சேர்ந்த மற்­ற­வர்­களும் நாட்டை விட்டு ஓடும் அபா­யம் இல்லை என்­ப­தால் இவர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தாக மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

அத்­து­டன் இவர்­கள் அனை­வ­ருக்­கும் பிணைத் தொகை­யாக 800,000 பாட் (S$35,000) நிர்­ண­யித்­துள்­ளது.

இதைத் தெரி­வித்த அந்த மூவ­ரின் வழக்­க­றி­ஞர், அவர்­கள் மூவ­ரும் தீர்ப்பை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­ய­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், இம்­மூ­வ­ருக்குப் பதி­லாக தற்­கா­லி­க­மாக வேறு மூவரை அமைச்­சர்­க­ளாக நிய­மிக்க உள்­ள­தாக பிர­த­மர் சான் ஓ சா விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!