மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

1 mins read
f62e1eda-fbb0-4b74-a6fe-bebd33e5cea3
பேராக்கின் சங்காட் ஜோங் கிருமித்தொற்று குழுமத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு காலை 10 மணியளவில் பேருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது. படங்கள்: தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொவிட்-19 நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று செர்டாங்கில் உள்ள யுபிஎம் சுங்கச் சாவடிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.

செர்டாங்கின் மேப்சில் இருக்கும் குறைந்த அபாயமுடையவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

அதில் பயணம் செய்த ஆறு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் சிகிச்சைக்காக மேப்சில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநரின் ஆகியோரின் நிலை பற்றித் தெரியவில்லை.

அந்தப் பேருந்தின் முன்புறம் மிகவும் மோசமாக சேதம் அடைந்திருந்தது. பேராக்கின் சங்காட் ஜோங் கிருமித்தொற்று குழுமத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு காலை 10 மணியளவில் பேருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

மேப்சில் இருக்கும் குறைந்த அபாயமுடையவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தை அது பிற்பகல் 1 மணிவாக்கில் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்