மியன்மாரில் போலிஸ் அதிரடி நடவடிக்கை; மோதலில் மாது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

மியன்மாரில் போலிஸ் அதிரடி நடவடிக்கை; மோதலில் மாது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

2 mins read
dd1afda0-0c15-417d-86d5-f89a3aca16a1
யங்கூன் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் நேற்று போலிசார் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

மியன்­மா­ரில் ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு எதி­ராக நாளுக்கு நாள் ஆர்ப்­பாட்­டங்­கள் வலு­வ­டைந்து வரும் வேளை­யில், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க நேற்று போலி­சார் அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க போலி­சார் ரப்­பர் தோட்­டாக்­க­ளைக் கொண்டு சுட்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்­தி­யா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார். அதன் பிறகு மாது ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் செய்­தி­கள் வெளி­யா­கின.

போலி­சார் உண்­மை­யான தோட்­டாக்­க­ளைக் கொண்டு சுட்­ட­னரா என்­பது பற்­றிய தெளி­வான தக­வல் இல்லை.

முன்­ன­தாக மியன்­மா­ரில் ஜன­நா­ய­கம் மீண்­டும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­துக்­கான மியன்­மார் தூதர் குயாவ் மோ தூன் கேட்டுக்­கொண்­டார்.

ஆட்­சிக்­க­விழ்ப்பு நடத்­திய மியன்­மார் ராணு­வத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஐக்­கிய நாட்டு நிறு­வ­னப் பாது­காப்பு மன்­றத்­தை­யும் அனைத்­து­ல­கச் சமூகத்­தை­யும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மியன்­மார் தலை­வர் திருவாட்டி ஆங் சான் சூச்சி சார்பில் தாம் பேசியதாகக் கூறிய அவர், ராணுவத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுக்குமாறு ஐக்கிய நாட்டிடம் முறையிட்டார்.

இதற்­கி­டையே, ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு பிறகு வீட்­டுக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த திரு­வாட்டி சூச்சி தம்­மு­டைய இல்­லத்­தில் இருந்து வேறோர் இடத்­துக்கு மாற்­றப்­பட்­ட­தாக அந்­நாட்டு ஊடக அறிக்­கை­கள் கூறின.

நிர்­வா­கத் தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் வசித்த அவரை ராணுவ அதி­கா­ரி­கள் சுமார் ஒரு வாரத்­துக்கு முன்­னரே வேறோர் இடத்­திற்­குக் கொண்டு சென்­று­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இருப்­பி­னும், திரு­வாட்டி சூச்சி எங்கு கொண்டு செல்­லப்­பட்­டார் என்­பது குறித்த விவ­ரம் எது­வு­மில்லை.

நாட்­டின் இறக்­கு­மதி, ஏற்­று­மதிச் சட்­டங்­களை அவர் மீறி­ய­தா­க­வும் ஆட்­சிக்­க­விழ்ப்பு நடத்­தப்­பட்ட பிப்­ர­வரி 1ஆம் தேதி அவ­ரது வீட்­டில் சட்­ட­வி­ரோ­த­மான தக­வல் தொடர்­புச் சாத­னங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் முன்­ன­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.