அமெரிக்க புலனாய்வுத் துறை: ஜமால் கஷோகி கொலைக்கு சவூதி பட்டத்து இளவரசர் ஒப்புதல்

சவூதி அரே­பிய பட்­டத்து இள­வ­ர­சர் முகம்­மது பின் சல்­மான், அந்­நாட்­டுச் செய்­தி­யா­ளர் ஜமால் கஷோ­கி­யின் கொலைக்கு ஒப்­பு­தல் அளித்­த­தாக அமெ­ரிக்க புல­னாய்­வுத் துறை தக­வல் வெளி­யிட்­டு உள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் வாஷிங்­டன் போஸ்ட் நாளி­த­ழுக்­குக் கட்­டு­ரை­களை எழுதி வந்த திரு கஷோகி, சவூதி பட்­டத்து இள­வ­ர­ச­ரின் கொள்­கை­களை விமர்­சித்து எழுதி­ இ­ருந்­தார். 2018ஆம் ஆண்­டில் துருக்­கி­யின் இஸ்­தான்­புல் நக­ரில் உள்ள சவூதி துணைத் தூத­ர­கத்­தில் திரு கஷோகி கொல்­லப்­பட்­டார். அவ­ரைப் பிடிக்­கவோ கொல்­லவோ எடுக்­கப்­படும் முயற்­சிக்­குப் பட்­டத்து இள­வ­ர­சர் அனு­மதி வழங்­கி­ய­தா­கப் புல­னாய்­வுத் துறை அறிக்கை ஒன்று கூறி­யது.

பட்­டத்து இள­வ­ர­ச­ரின் ஒப்­பு­தலின்றி இந்­தக் கொலை நடந்­து­ இருப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறைவு என்­றது அந்த அறிக்கை.

இதற்கு சவூதி அரே­பியா மறுப்பு தெரி­வித்­துள்­ளது. அந்த அறிக்கை போலி­யா­னது என்­றும் அதை ஏற்றுக்­கொள்ள முடி­யாது என்­றும் சவூதி அரே­பியா கூறி­யது.

அமெ­ரிக்­கா­வின் நட்பு நாடாக உள்­ளது சவூதி அரே­பியா. அமெ­ரிக்க புல­னாய்­வுத் துறை வெளி­யிட்­டுள்ள இந்த அறிக்கை, அமெ­ரிக்க-சவூதி உற­வில் விரி­சலை ஏற்­ப­டுத்­துமா என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருது­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!